யார் இந்த சாதனைப் பெண்???- GUESS
1997 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் லண்டனிலுள்ள கில்டுஹால் விழாக்கோலம் பூண்டிருந்தது, அந்த மிகப்பெரிய அரை முழுவதும் அறிவாளிகள் நிரம்பி வலிந்தனர் .சிறியது அழகானது மட்டுமல்ல, ஆனால் பெரியது பெருமை மிக்கது, கம்பீரமானது என்று நிரூபித்தார் 27 வயதே நிரம்பிய ஒரு இந்திய இளம் பெண் அன்று ஒரு மிகப் பெரிய சாதனைப் படைத்தார்.அன்றைய சரித்திரத்தின் படி புக்கர் பரிசை வென்ற இளையவர் என்ற வரலாறு படைத்தவர். அறிமுக நாவலுக்காக பெருமை மிகு இலக்கியப் பரிசு பெற்றவர்களில் முதல் பெண்.போக்கர் பரிசை வென்ற முதல் முழுமையான இந்தியர் இந்த அழகான தேவதைதான். இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, இங்கேயே வேலையும் செய்து வருகிறார். இவருடைய எழுத்துக்களில் பெரும்பாலும் வற்றிய வயிறும், ஓட்டியக் கன்னமும் , பற்றிய வறுமையும் கொண்ட கடைக் கோடி இந்திய பாமரனைக் காணலாம். வங்காள இந்து தந்தைக்கும், கேரளா கிறிஸ்தவ தாய்க்கும் 1962ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார்.தனது முதல் நாவலுக்காக அதிகத் தொகையை முன்பணமாகப் பெற்ற ஒரே இந்திய நாவல் ஆசிரியர் இவராகத்தான் இருக்க முடியும். கலாச்சாரத்தின் பால் முரண்பாடு கொண்டாலும் கருத்தில் மிகுந்த தெளிவு கொண்டவர்." In Which annie it thoose one", Electric Room போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியதன் மூலம் அங்கீகாரம் பெற்றவர். இவர் எழுதிய God of Small Things என்ற நாவலே புக்கர் பரிசை வென்றது. பல சமூகப் போராட்டங்களில் தன்னை முன்னிறுத்தி இன்று இந்தியாவின் தலை சிறந்த பெண்மணிகளில் ஒருவராக சிறந்து விளங்கும் இவர் யார்????
Comments
Post a Comment