சூர்யா ஒரு சகாப்தம்...........
நடிகர் சூர்யா இன்று சிகரம் தொட்ட சில மனிதர்களில் இவரும் ஒருவர், சூர்யாவின் இயற்ப்பெயர் சரவணன்.சூர்யா தாழ்வு மனப்பான்மையாலும், தோல்விகளாலும் துவண்டு தான் ஒரு தோற்றுப் போனவன் என்று தனக்குத் தானே முத்திரைக் குத்திக் கொண்ட ஒரு இளைஞன். தனது பள்ளி பருவ நாட்களில் ஒரு சராசரி மாணவனாக வலம் வந்தவர், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைய எவ்வளவு மதிப்பெண் தேவையோ அதை மட்டுமே எடுத்து சில நேரங்களில் அந்த மதிப்பெண்ணும் எடுக்க முடியாமல் ரேன்க் கார்டில் அப்பா சிவக்குமாருக்குத் தெரியாமல் அம்மாவின் கையெழுத்தைப் போட்டு கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் தனது பள்ளிப் பருவங்களைக் கடந்து வந்த ஒரு சராசரி மாணவன். இவர் தான் படித்த பள்ளியில் ஒரு சிறிய தவறு செய்து விடவே பள்ளி நிர்வாகம் சூர்யாவின் தந்தையை அழைத்து டி.சி யைக் கொடுத்து அனுப்ப , சிவக்குமார் மன உளைச்சல் அடைந்து சூட்டிங்கிற்கு லீவ் போட்டு அடுத்தடுத்து பல பள்ளிகள் ஏறி இறங்கி கடைசியில் சாந்தோமில் உள்ள செயின்ட்.பீட்ஸ் பள்ளியில் இடம் கிடைத்து சேர்க்கப் பட்டிருக்கிறார். இந்த பள்ளியில் அட்மிசன் வாங்குவதற்காக தான் ஒரு நடிகன் என்ற எந்த வித பந்தாவும் இல்லாமல் உச்சி வெயிலில் வரிசையில் நின்று கூட்டத்தோடு கூடமாகவே சிவக்குமார் சென்றிருக்கிறார், இதை கூடவே நின்று பார்த்த சூர்யா தான் செய்த தவறுக்காக மன வேதனைப் பட்டிருக்கிறார். ஒரு வழியாக இந்தப் பள்ளியில் 72% சதவிகித மதிப்பெண்களுடன் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த சூர்யா ஆயிரம் கனவுகளோடு தனது சிறகை விரித்து பட்டப் படிப்பிற்காக லயோலாக் கல்லூரியை அணுகியுள்ளார், அங்கே இவரது application'ஐ படித்துப் பார்த்த பிரின்சிபால் சுர்யாவிர்க்குத் தகுதி இருந்தும் இவர் ஒரு நடிகனின் மகன் என்பதற்காக மட்டுமே இடம் மறுக்கப் பட்டிருக்கிறது. சிவக்குமார் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் பிரின்சிபால் இறங்கி வர வில்லை. சோர்ந்த முகத்துடன் உலகமே இருண்டு விட்டதை போல வீட்டிலேயே முடங்கிக் கிடந்த சூர்யாவிற்கு அடுத்த மூன்றாவது நாளில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. லயோலாக் கல்லூரியிலிருந்து சூர்யாவிற்கு ஒரு கடிதம் வந்தது அந்தக் கடிதத்தில் சிவக்குமாருக்கு திரையுலகில் இருக்கும் நற்பெயருக்காகவும், சூர்யா எடுத்திருக்கும் 72% மதிப்பெண்களுக்காகவும் சூர்யாவை கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. வெற்றிகரமாக தனது கல்லூரிப் படிப்பையும் முடித்த சூர்யாவிற்கு நடிப்பின் மீது ஆர்வமே இல்லாமல் இருந்தது, சூர்யா ஒரு நடிகன் ஆவதை சிவக்குமாரும் ஊக்குவிக்கத் தயாராக இல்லை. எனவே சூர்யா கல்லூரிப் படிப்பை முடித்தக் கையேடு தான் ஒரு நடிகனின் மகன் என்ற அடையாளத்தை எங்கேயும் காட்டிக் கொள்ளாமல் பல கம்பெனிகள் ஏறி இறங்கினார், இறுதியாக அம்பத்தூரிலுள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தனது முயற்ச்சியால் ஏதோ ஒரு வேலைக் கொடுத்தால் போதும் என்று சேர்ந்து இருக்கிறார், சேர்ந்த முதல் நாளே office boy வராதக் காரணத்தால் அங்கே இருந்த அலுவலர் அவரது ரூமைக் கூட்டித் துடைக்கச் சொல்லி இருக்கிறார்.சூர்யாவும் எந்த வித தயக்கமும் இன்றி அவர் சொன்ன வேலையை செய்து முடித்திருக்கிறார்..................:- "இப்படிக்கு சூர்யா" என்ற நூலிலிருந்து
Comments
Post a Comment