என்
தேடலில் எனக்காய்
எனுள்ளே
புதிதாய் பிறந்தவள்..
தன்னுள்
என்னையும் புதைத்து இதயத்தை
கொடுத்தால்-தன்
இதழ்களால் முத்தமிட்டு...
ஏகோபித்த என் மனது
எச்சில் படிந்த அவள்
இதழ்களையும் கேட்டது...
அவள்
நாணத்தில் முகம் சிவக்க
இறுக்கி அணைத்த
என் கைகள் அவளை
முத்தத்தால் மூர்ச்சையாக்கி
மோகத்தில் ஆழ்த்தியது...
ஒரு போர்வைக்குள்
இரு ஸ்பரிசம்..
தெவிட்டாத நம் காதல்
இறந்தாலும்
என்றும் இருக்கும்...
Comments
Post a Comment