இந்தியப் பிரிவினைக்குப் பின்னால்.........

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப் பட்ட பொழுது அந்த நேரத்தில் பாகிஸ்தானின் சிந்து மற்றும் கராச்சி பகுதிகளில் நடை பெற்ற கட்டவிழ்த்து விடப்பட்டஅராஜகமும்,  வன்முறையும்  நமது கற்பனைக்கும் எட்டாதவை. அன்று நிறைவேற்றப் பட்ட இருநாடுகள் கொள்கையை சிந்து மற்றும் கராச்சிப் பகுதிகளில் வாழ்ந்த எந்த ஒரு இஸ்லாமியரும், இந்து மதத்தைச் சேர்ந்தவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.பாகிஸ்தானை ஒரு முழுமையான முஸ்லிம் நாடாக அறிவிக்கக் கோரி அதற்க்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டு முதன் முதலாக ஜின்னா பாகிஸ்தான் வந்த பொழுது அவருக்கு பாராட்டுத் தெரிவித்து அன்று மாலை நடை பெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 150 பேர் மட்டுமே. சிந்து பகுதியிலிருந்த இந்துக்களை வெளியேற்றக் கேடு விதிக்கப் பட்ட நாள் முதல் அங்கு  நடை பெற்றக் கலவரங்கள் மணிரத்தினம் படங்களில் நாம் பார்த்த கலவரங்களைத் தாண்டியும் கற்பனைக்கெட்டாதவை. பல்லாயிரக் கணக்கான இந்துக்களும் சீக்கியர்களும் இந்தக் கலவரத்தில் கொள்ளப் பட்டனர். அன்று இரவு அங்கே இருந்த சிந்தி சபாவில் பம்பாய்க்கு செல்வதற்காக தங்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொள்ளப் பட்டனர்.இந்தப் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு குடியேறியவர்களில் நமக்குத் தெரிந்த முக்கியமான இரண்டு பிரமுகர்கள் எல்.கே.அத்வானி மற்றும் புகழ் பெற்ற சட்ட மேதை ராம் ஜெத்மலானி ஆவர். லால் கிஷாந் அத்வானி என்பது அத்வானியின் முழு பெயர் ,இதில் லால் என்பது அத்வானியின் பெயர், கிஷாந்த் என்பது அவரது தந்தையின் பெயர், அத்வானி என்பது அவருடைய குடும்பப் பெயர்: - அத்வானியின் என் தேசம் என் வாழ்கை  என்ற நூளிலிருந்து.......

Comments