தவறவிட்ட ஞாபகங்கள்!!!!!
எனது
மவுனங்க்களோடு
ஒரு நீண்ட தூரப்
பயணம்
அழுத்திக் கிடக்கும்
உரையாடல்களின்
உந்துதல்.....
எண்ணங்களை இறக்கிவிட்டு
உடலை மட்டும் தூக்கிக் கொண்டு
கனத்த நெஞ்சத்தில்
கண்ணீர் மட்டும் மொழியாக
எடை இழக்கும் எதுவாயினும்
கொஞ்சம்
இழைப்பாருங்கள்
என் இதயமும்
சேர்த்து!!!!
பட்டிக்காட்டு
ஒற்றைப் பனையின்
ஊர்க் குருவியின்
ராகம் மறந்து
கூட்டுக் கிளிகள்
ஜதிபாட
ஓர் உயர்ந்த
தேசத்துப் பயணம் போகிறேன்
வயல் காட்டின்
ஆக்சிஜன் தொலைத்து
நகரத்து நச்சுக் காற்றுக்கு
அடிமைப் பட கிளம்பிவிட்டேன்
முப்பது வருடங்கள்
நான் சுவாசித்தக் காற்று
எனை நனைத்த
மழைகள்
இச்சைப் படுத்திய
ஜன்னலோரச்
சாரல்கள்
வானம், மேகம்,
நிலா, நதி ,மரம்
ஓடை,ஒற்றைப் பனை
ஊரோர ஆல மரம்
அடுத்த வீட்டு ஜன்னல்
அவள் போன பாதை
அத்தனையும்
இறக்கி வைத்துப் போகிறேன்
இறக்கி வைக்க முடியாத
அவள்
ஞாபகங்களோடு !!!!!!!!!!!
Comments
Post a Comment