எட்டாத தேசத்து
வானவில்
தொட்டுவிட்ட
தூரத்தில்
எல்லைகளை கடந்த
பிம்பங்களாய் நெஞ்சம்
தத்தித் தாவுகிறது!!!!!!!
சாரம் தோய்ந்த
உடைபட்ட கண்ணாடிகளின்
ஒவ்வொரு சில்லுக்குள்ளும்
எனது வேறுபட்ட முகங்கள்
ஒருவன் சிரிக்கிறான்
ஒருவன் அழுகிறான்
ஒருவன் கோபப்படுகிறான்
ஒருவன் கேலி செய்கிறான்
ஒருவன் குழந்தையாய் இருக்கிறான்
ஒருவன் அரக்கனாக இருக்கிறான்
ஒருவன் காதலைத் தேடுகிறான்
இன்னொருவன் கவிதையைத் தேடுகிறான்
வேறொருவன் காதலியைத் தேடுகிறான்
இன்னொருவன் காணாமல்
தொலைத்து விட்ட
ஏதோ ஒன்றைத் தேடுகிறான்!!!!
இழந்துவிட்ட முகங்கள்
எத்தனை இருந்தாலும்
தொலைக்கப்பட்ட
ஒரு முகத்தை இன்னும்
தேடி கொண்டே இருக்கிறேன்!!!!!!!!
தீராத தாகம்
தீர்ந்து விடாத ராத்திரிகள்
இன்னும் முயற்ச்சிக்கிறேன்
மூச்சுக் காற்றின் இறுதி மூச்சு
உள்ளவரை!!!!
என் மனம்
என்னவென்று
என்னையன்றி யாருக்குத்
தெரியும்????!!!!!
Comments
Post a Comment