சூர்யா ஒரு சகாப்தம்-2

இவ்வாறு தனது career-ஐ தொடங்கிய சூர்யா டெக்ஸ்டைல் மில்லில் கடினமாக உழைத்திருக்கிறார், தினமும் கடைகளில் order எடுப்பதற்காக அம்பத்தூரிலிருந்து கேளம்பாக்கம் வரை சென்று வருவார். தான் பார்த்த இந்த வேலையை முழுமனதோடு அனுபவித்து செய்து இருக்கிறார். முதல் மாதம் முடிந்ததும் சம்பளம் ருபாய் 1200/-ஐ கையில் வாங்கிக் கொண்டு உடனடியாக வீட்டிற்க்குச் சென்று அம்மாவிற்கு சேலை வாங்குவதற்காக வீட்டில் இருந்த தங்கையை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்கு சென்று புடவை வாங்கி இருக்கிறார், புடவையின் விலை 1342 ரூபாய் வர , தங்கையிடமிருந்த சில்லறைகளையும் முழுமையாகத் துடைத்து அன்று அம்மாவிற்கு புடவை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.ஒரு சராசரி மகனுக்கே உரிய பொறுப்பு, ஆசை அன்று அவருக்கும் இருந்திருக்கிறது.இவ்வாறாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்க,ஒரு நாள் திடீரென்று டைரெக்டர் வசந்த் சூர்யாவின் வீட்டிற்கு வந்து மெட்ராஸ் டாக்கீஸ்கு ஒரு படம் அவர் செய்யப் போவதாகவும் அதில் சூர்யா நடிக்க வேண்டுமென்றும் கேட்டு இருக்கிறார்,ஆனால் சூர்யாவிற்கு அது ஒரு இன்ப அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்க, அவருக்கு உடனே ஒ.கே சொல்லாமல் ஒரு வாரம் டைம் வேண்டுமென்று கேட்டு இருக்கிறார். ஒரு வாரம் கழித்து மீண்டும் டைரக்டர் வசந்த் சூர்யாவிடம்  கேட்க அரை மனதோடு ஒ/கே சொல்லி இருக்கிறார். இந்த செய்தியை தனது அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் சக நண்பர்களிடம் கூறும்பொழுது சூர்யாவை எல்லோரும் கேலி செய்திருக்கின்றனர். சூர்யாவை அடுத்த சில தினக்களில் போட்டோ சூட்கு வரச் சொல்ல, சுர்யாவிர்ற்கு நம்பிக்கை இல்லாமலே எப்படியும் அவரை நிராகரித்து விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே சென்றிருக்கிறார். மாறாக சூர்யாவை டைரக்டர் மணிரத்தினமும், வசந்த்தும் அழைத்து வாழ்த்து தெரிவித்து சூர்யாவிற்கு திரை உலகத்திற்கான கதவைத் திறந்து முதல் வாய்ப்பை " நேருக்கு நேர் "  படத்தின் மூலம் வழங்கி இருக்கின்றனர். இந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பை மெருகேற்ற டைரெக்டர் வசந்த் பட்ட சிரமங்களை சொல்லி மாளாது என்று சூர்யாவே சொல்லி இருக்கிறார். ஒரு வழியாக படம் முடிந்த ரிலீஸ் ஆக, சூர்யாவிற்கு வந்த எதிரிடையான விமர்சனங்கள் அவரை நொறுங்கிப் போக வைத்திருக்கின்றன.,அவரை தாழ்வு மனப்பான்மை மீண்டும் தொற்றிக் கொள்ள, தந்தை சிவக்குமார் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றி இருக்கிறார். ஒரு மிகப் பெரிய நடிகராக அன்றைய காலக்கட்டத்தில் சிவக்குமார் இருந்தாலும் ஒரு தந்தைக்குரிய கடமைகளை ஒவ்வொரு நேரத்திலும் சூர்யாவிற்கு பக்க பலமாக இருந்து மிகப்பெரிய ஆறுதலையும், அரவணைப்பையும் சரியான நேரங்களில் சூர்யாவிற்கு வழங்கி அவரை செம்மைப் படுத்திய பெருமை சிவக்குமாரையே சேரும். ஒரு நிறைவானத் தந்தையாக சிவக்குமாரை நாம் இங்கே பாராட்டியே ஆக வேண்டும். சினிமாத் துறையில் இருந்தும் இன்று வரை தனது பெயருக்கு எந்த வித களங்கமும் இல்லாமல் ஒழுக்கமான ஒரு நடிகராகவும், நிறைவான , சிறந்த ஒரு தந்தையாகவும் மற்றவர்களுக்கு  ஒரு உதாரணமாக, இலக்கணமாக  வாழ்ந்து வரும் திரு. சிவக்குமார் அவர்களுக்கு எனது கண்ணீர் கலந்த நன்றியையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.......பதிவுகள்:- "இப்படிக்கு சூர்யா" என்ற நூலில் இருந்து..........  

Comments