கல்லறை இரவுகள்...

காதலுக்கும் கவிங்கனுக்கும் 
எட்டி விடாத தூரத்தை 
தொட்டு விட்ட 
வித்தக கவிங்கனாக நான்..,
எவருக்கும் புரியாத 
புத்தக மனுஷியாக நீ...,
என் 
இரவுகளை காகிதங்கலோடே
நனைத்துக் கொண்டிருக்கிறாய்..,

மறந்த பொழுதுகளை 
மன்னித்து விட்டேன் 
ஏனோ இருந்தும்,இறந்தும் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..,

களைந்த கனவுகள் 
காற்றோடே போயின
ஏனோ இருந்தும் 
என்னை
இறக்கச் செய்கிறாய்..,

இழந்து இழந்து 
நான் இன்று 
இல்லாமலேயே போய்விட்டேன்..,

மரித்த உணர்வுகள்
தரித்த காயங்கள்
என் 
கல்லறைகுல்லேயே
காத்துக் கிடக்கின்றன..,

என்றாவது ஒரு நாள் 
ஒரு நொடிப் பொழுதேனும் 
உன் 
வருகையைப் பதிவு செய்!!!

Comments