தொலைந்த ஞாபகங்கள்...

விதைத்தேன்
விதியை நினைத்தேன் 
நானே தொலைந்தேன்...

உறவுகள் ஊமையாக 
மௌனம் கலைத்தேன்..

கதைக்கும் கவிதைக்கும் 
என்ன உறவு..
காதலுக்கும் கவிங்கனுக்கும்
என்ன உறவு...
விடுகதை தொடுத்தேன் 
விடை சொல்ல யாருமில்லை..

மண்ணுக்கும் மனிதனுக்கும் 
உள்ள உறவு 
இங்கே 
பெண்ணாலே தொடர்கிறது...

கண்ணீரை துடைக்க 
கரம் ஒன்று போதாது
கண்களை பிடுங்கி
குருடனானேன்...

வேலி   போட
கம்பனை அழைத்தேன் 
அவன் விலை பேசி
வீடு திரும்பினான்...

கள்ளிச் செடிக்கு 
முள்ளில் வேலி...

காற்றைத் தடுக்க
காகிதப் பந்தல்..

சோற்றுக்கே வலி இல்லை
சாட்சிக்கு ஊர் வருமாம்...

Comments